Tiruppur

News November 19, 2024

திருப்பூர் அரசியலில் இது புதுசா இல்ல இருக்கு!

image

பெருமாநல்லூர் நால் ரோட்டில் அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கட்சி கூட்டங்களில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி, குருமா வழங்கப்படும். ஆனால் நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

News November 19, 2024

பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்: 4 பேர் கைது!

image

திருப்பூர் வீரபாண்டியில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் நேற்று நள்ளிரவு டீ இல்லை என்று கூறியதால் போதை கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதனை ஆதாரமாகக் கொண்டு போலீசார் சிவா (36), கனகராஜ் (38), கார்த்திக் (29), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

News November 19, 2024

திருப்பூரில் தனியார் பள்ளிக்கு விடுமுறை

image

திருப்பூர் ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு நேற்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வதந்தி என தெரிய வந்த நிலையில் இன்றும் (நவ.19) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 18, 2024

திருப்பூரில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

image

திருப்பூர் ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு இன்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வதந்தி என தெரிய வந்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 18, 2024

திருப்பூரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி 

image

திருப்பூர் தனியார் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. உடனே பள்ளிக்கு விடுமுறை அளிக்கபட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியின் அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இந்த தகவல் பொய்யானது என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News November 18, 2024

பொள்ளாச்சியுடன் இணைகிறதா உடுமலை, மடத்துக்குளம்?

image

தமிழகத்தில் 2025 குடியரசு தினத்தன்று புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அப்போது திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தாலுக்காக்களை பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுபோன்று முன்பு பழனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2024

கோவையை வீழ்த்திய திருப்பூர்

image

மேற்கு மண்டல தபால் துறை சார்பில் ‘போஸ்டல் பிரீமியர் லீக்-2024’ எனும் கிரிக்கெட் போட்டி நேற்று கோவையில் துவங்கியது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி உட்பட ஏழு கோட்ட அணிகள் பங்கேற்கின்றன. நேற்றைய முதல் போட்டியில், கோவை எம்.எம்.எஸ்., அணியினரும், திருப்பூர் தபால் கோட்ட அணியினரும் விளையாடினர். இதில் திருப்பூர் அணி முதல் போட்டியிலேயே 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

News November 18, 2024

திருப்பூர் மாவட்டத்தில் 218.40 மிமீ மழை பதிவு

image

திருப்பூர் வடக்கு தாலுகா பகுதி 1 மிமீ, குமார் நகர் பகுதி 14.40 மிமீ, திருப்பூர் தெற்கு 7 மிமீ, கலெக்டர் அலுவலகம் 9 மிமீ, அவினாசி 4 மிமீ, ஊத்துக்குளி 5.20 மிமீ, பல்லடம் 7 மிமீ, தாராபுரம் 11 மிமீ, மூலனூர் 3 மிமீ, குண்டடம் 5 மிமீ, உப்பாறு அணை 6 மிமீ, நல்லத்தங்காள் ஓடை அணை 25 மிமீ, காங்கயம் 9 மிமீ, வெள்ளகோவில் 3 மிமீ, வட்டமலைகரை ஓடை அணை 5.60 மிமீ. மழை நேற்று பதிவானது.

News November 18, 2024

திருப்பூரில் மதமாற்ற சர்ச்சை: மேயர் மறுப்பு

image

திருப்பூரில் தன்னார்வ அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சி, 16ம் தேதி தெற்கு ரோட்டரி கிளப் அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சி மதம் மாற்றும் நோக்குடன் நடந்துள்ளதாகவும், மேயர் தினேஷ்குமார் மற்றும் திமுக பிரமுகர்கள் பங்கேற்றதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில், இது உண்மையில்லை என மேயர் தினேஷ்குமார் நேற்று மறுப்பு தெரிவித்தார்.

News November 17, 2024

திருப்பூரில் டெங்கு காய்ச்சல் – மருத்துவர்கள் எச்சரிக்கை

image

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் , கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.