Tirupathur

News October 5, 2024

திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் சிவகங்கை நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக தங்களது பகுதியில் இருக்கவும்.

News October 5, 2024

புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த முனி சுப்பராயன் பணி ஓய்வு பெற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த ஆர்.புண்ணியக்கோட்டி தற்போது திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 5, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 சென்டிமீட்டர் மழை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 32.1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு ஆம்பூர், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு விடிய விடிய பெய்த கன மழையின் 32.1 சென்டிமீட்டர் அளவிற்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 5, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் கேபிஏ பேலஸ் திருமண மண்டபத்தில் 06.10.2024 அன்று காலை 8 மணி முதல் 2 மணி வரை தென்னிந்திய நம்பர் ஒன் நேரடி வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் நடத்தும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. வேலையற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

News October 4, 2024

15ஆம் நூற்றாண்டின் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

image

ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் வட்டம் என்ற இடத்தில் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்து நடுகல் இன்று கண்டறியப்பட்டது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வு மேற்கொண்ட போது 15 ம் நூற்றாண்டின் போர் வீரன் நடுகல் என உறுதியானது.

News October 4, 2024

தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை பலி

image

திருப்பத்தூர் அருகே சின்னபசிலிகுட்டை பகுதியை சேர்ந்த மோகன்-பிரவீனா தம்பதியரின் 2 வயது குழந்தை கிருத்திகா. இவருடைய தாத்தா காந்தி என்பவர் தண்ணீர் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே கிருத்திகா விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் இழப்பு

News October 4, 2024

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

image

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்ற பிரிவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும்
காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

News October 4, 2024

பாலியல் துன்புறத்தலுக்கு 181 எண்ணை அழைக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கள் பணி புரியும் இடங்களிலும் மற்ற இடங்களிலோ இழிவுபடுத்தினாலும் தங்களை அவமரியாதை செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் உடனடியாக 181 என்ற எண்ணிற்கு பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

News October 4, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 9,10,23,24 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாமுக்கு தேவையான படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 4, 2024

திருப்பத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் பட்டதாரி–கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!