India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் தொலைபேசியில் புளூடூத்தை பயன்படுத்திய பிறகு முறையாக ஆஃப் செய்வதன் மூலம் ஹேக்கர்கள் ஹேக் செய்வதை தடுக்கலாம் என்றும், இதனால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரின் இரு பிள்ளைகளை படிக்க வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கடந்த திங்கள் தின குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு வழங்கினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவரின் 2 பிள்ளைகள் படிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த நிலையில், தாய் மலர் அரசின் செயல்பாடுகளால் மனம் நிறைந்ததாக பாராட்டு தெரிவித்தார்.
திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேவேந்திரன் 2021 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்டவர். இச்சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அம்பலூர் அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மனைவி ஊருக்கு சென்றிருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று காலை துர்நாற்றம் வீசுவதை அறிந்து பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (நவ 7) அதிமுக 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது கூட்டம் சேலம் கூட்டுரோட்டில் நடைபெறுகிறது. இக்கூட்டமானது ஒன்றிய செயலாளர் திருப்பதி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி, முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமைக் கழக பேச்சாளர் இரா.காவேரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். எனவே நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல்நிலையங்கள் மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் 2024-25 ஆம் ஆண்டுக்கான மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது என்றும், இதில் பயன்பெற 9790413862 என்ற எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை தடுக்க பல்வேறு முறையற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முகநூல் பக்கத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்போம் எனவும் குழந்தைகளைப் பாதுகாப்போம் எனவும், குழந்தைகளைப் பாதுகாக்க புகார் உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ள காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தாலுக்கா அளவிலான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதாந்திர சிறப்பு முகாம் வாணியம்பாடி தாலுக்கா, பள்ளத்தூர், நாட்றம்பள்ளி தாலுக்கா, புத்துக்கோயில், ஆம்பூர் தாலுக்கா, கோவிந்தாபுரம், திருப்பத்தூர் தாலுக்கா, சுந்தரம் பள்ளி ஆகிய நியாய விலை கடைகளில் 09.11.2024 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற அன்றாடம் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் நலத்திட்டங்களை பெற எந்த வகையிலும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.