Tirupathur

News November 10, 2024

பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க எண் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு பதிவு செய்தல், உதவிகள் தொடர்பாக பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 18002021989 அல்லது 14566 எண்ணில் அரசு அலுவலக நாட்களில் அலுவலகப் பணி நேரத்தில் புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.16ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News November 9, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கத்தரி திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, ஆம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று தொடர்ந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் விதிகள் குறித்து மக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News November 9, 2024

கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தணிக்கை

image

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆண்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். பின்னர் ஒவ்வொரு துறை சார்பிலும் தனித்தனியே தணிக்கை செய்யப்பட்டு அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் துறை ஆவணங்கள், சிறப்பு திட்டங்கள், அரசு திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

News November 9, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கு பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் நவ 20-ஆம் தேதிக்குள் www.mudhalvarmarundhagam.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

News November 9, 2024

ஆவின் விற்பனை பிரிவு கைபேசி எண்கள் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் ஆவின் முகவர்களை நியமித்து நுகர்வோர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், நிர்வாகம் சார்பில் ஆவின் விற்பனை பிரிவு கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர்-ஜே.வெங்கடேசன்- 8754748759, வாணியம்பாடி-என்.ஹரிஹரன்-8667561840, ஆம்பூர்-வி.பாலகிருஷ்ணன் – 9566797735.

News November 8, 2024

இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (08.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News November 8, 2024

பேருந்தில் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவர்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து தமிழக – ஆந்திரா எல்லைப்பகுதியான வெலதிகாமணிபெண்டா பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து துறையினர் அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 8, 2024

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் தர்மபுரி சாலையில் அமைந்துள்ள விஜய் சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணியளவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவித்துள்ளனர். மேலும் இம்முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் 5000 மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News November 8, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை தனது முகநூல் பதிவில் டெலிவரி என்ற பெயரில் நடக்கும் பண மோசடி குறித்து எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.டெலிவரி என்ற பெயரில் நீங்கள் ஆர்டர் செய்யாத பொருட்களுக்கு பணம் கேட்டு வரும் அழைப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்றும், ஆர்டர் செய்த பொருட்கள் கைக்கு வந்த பிறகே பணம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!