India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் எதிர்வரும் நவ. 16 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர் விஜய் சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஜிடிபி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற வாராந்திர திங்கள் தின குறைதீர்ப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சேர்ந்தவர் கோபி. இவரும் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியைச் சேர்ந்த ஷாலினியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு இன்று ஜோலார்பேட்டை போலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 2-ஆவது ஆம்பூர் புத்தகக் கண்காட்சி ஆம்பூர் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் இன்று தொடங்கி நவ 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை, ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று( நவ 11) திங்கள்கிழமை நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை வழங்கலாம். இத மூலம் உடனுக்குடன் தீர்வை பெற வாய்ப்புள்ளதால், இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு உரிய அதிகாரிகள் மூலம் நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று (நவ 10) மாலை வாக்கிங் செல்வதற்காக வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த நபர், சிவக்குமாரிடம் செல்போன் கேட்டு தகராறில் ஈடுப்பட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சிவக்குமார் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (10.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
வாணியம்பாடி- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி வழியாக ஜோலார்பேட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 35 வயது தக்க ஒருவர் தவறி விழுந்து இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 10) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிட்டப்பையனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வகுப்பறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களை பள்ளி எதிரே உள்ள கோயில் வளாகத்தில் உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இதை ஆய்வு செய்த ஒன்றிய குழு தலைவர் கூடுதல் வகுப்பறை மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.