Tirupathur

News November 14, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் ஆம்பூர் தாலுகா டவுன், வாணியம்பாடி தாலுகா டவுன், திருப்பத்தூர் தாலுகா டவுன், கந்திலி, உமராபாத், நாட்றம்பள்ளி ஆலங்காயம் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

News November 14, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை( நவ 15) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இக் குறைதீர் கூட்டமானது நவ 29ஆம் தேதி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (13.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு புகார்கள் தெரிவிக்கலாம்.

News November 13, 2024

எஸ்.பி தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (13.11.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

News November 13, 2024

மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகளை வாங்குவதற்கு மானியமாக ரூ.15000 வழங்கப்பட உள்ளதாகவும், திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், அல்லது மாவட்டத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News November 13, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கத்தில் இருசக்கர வாகனமானது இருவருக்கு மட்டுமே என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிவேகமாக செல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

News November 13, 2024

நவம்பர் 15-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறும் எனவும், மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

News November 13, 2024

திருப்பத்தூர் அருகே பாலியல் தொழில்; 10 பேர் கைது 

image

ஜோலார்பேட்டை மண்டலவாடி ரவி என்பர் வீட்டிலும் ஜேஎன்ஆர் நகர் மனோகரி என்பர் வீட்டிலும் பெங்களூர் இளம்பெண் உள்பட 5 பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டதாக ஜோலார்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று இரண்டு பெண்கள் உட்பட 10 பேரை பாலியல் தொழில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 5 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

News November 13, 2024

திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் 

image

வாணியம்பாடி பஜார் பகுதியில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல கடினமாக இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் அன்றாட பொருட்களை வாங்க பயணித்து வரக்கூடிய சூழலில் தாறுமாறாக கார் ஒன்று ஓடியுள்ளது. காரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காரில் இருந்த மதுபாட்டில் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2024

ஜோலார்பேட்டையில் 10 பேர் மீது வழக்கு

image

ஜோலார்பேட்டை போலீசார் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, மண்டலவாடி ரவி என்பவர் வீடு மற்றும் ஜேஎன்ஆர் நகர் மனோகரி ஆகியோர் இருவரின் வீட்டில் 5 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!