Tirupathur

News August 15, 2025

திருப்பத்தூர்: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

News August 15, 2025

EXCLUSIVE: 7ஆம் ஆண்டில் திருப்பத்தூர்

image

தமிழ்நாட்டின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆம், ஆகஸ்ட் 15, 2019 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூரை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 6 ஆண்டுகள் முடிந்து 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் திருப்பத்தூரில் படித்தவர்கள் பணிபுரிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. உங்க கருத்து என்ன? SHARE IT

News August 14, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

image

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

News August 14, 2025

திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட்15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியேற்றுகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் மாவட்ட எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 511 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செளமியா தெரிவித்தார்.

News August 14, 2025

திருப்பத்தூர்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளின் உடைமைகள், பயணிகளின் ரயில்களில் தீவிர சோதனை செய்தனர்.

News August 14, 2025

திருப்பத்தூர்: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

காவல்துறை எச்சரிக்கை: நம்பி ஏமாற வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை, நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துயுள்ளனர்.

News August 14, 2025

திருப்பத்தூரில் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News August 14, 2025

திருப்பத்தூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!