Tirupathur

News November 16, 2024

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A. நல்லதம்பி ஏற்பாட்டில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு இரு முறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு தேர்வு 23.11.2024 அன்று வனத்துறை மேல்நிலைப்பள்ளி புதூர் நாட்டில் நடைபெறும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதற்கு 10,+2 மற்றும் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2024

படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

image

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் வெளியிடுகிறது. சிறார் இதழ்களில் படைப்புகளை வெளியிட்ட திருப்பத்தூர் மாவட்ட இளம் படைப்பாளர்களுக்கான பாராட்டு விழா ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

News November 15, 2024

திம்மாம்பேட்டை இரவு ரோந்துபணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி திம்மாம்பேட்டை, அம்பலூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரவு நேர காவலர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News November 15, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் 

image

திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (15.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதல் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News November 15, 2024

திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் அடுத்த ஸ்ரீ விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவ.16) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04179-222033 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

News November 15, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின்  எச்சரிக்கை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என பொய்யாக விளம்பரப்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். தங்களின் ஆதார் மற்றும் ஆவணங்களை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

News November 15, 2024

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான விண்ணப்ப படிவத்தை திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒத்திவைப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறும் என அறிவித்த நிலையில் நிர்வாக பணி காரணமாக வருகின்ற 29.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்கள்.

News November 15, 2024

திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்!

image

திருப்பத்தூர் நகராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயசாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 16-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மூன்று மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோ மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒன்றிய மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. http//bcmbmw.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது

error: Content is protected !!