India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை துறையின் திருப்பத்தூர் மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாய பகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேளாண்மைப் பொருட்களை காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், விரைந்து காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பலூர், நாட்டாரம்பள்ளி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஏலகிரி, கந்திலி போன்ற பகுதிகளில் உள்ள காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (17.10.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் மாற்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட தாசிரிப்பனூர் பகுதியில் உள்ள ராமநாயக்கன் பேட்டை பிரிவு சாலை பகுதியில் இயங்கி வரும் உணவகத்தின் பெண் உரிமையாளர் மீது இன்று காலை 10 மணி அளவில் அரசு பேருந்து மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் இப்போது அதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திம்மாம்பேட்டை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (16.11.2024) அதிகபட்சமாக திருப்பத்தூர் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில், 17.40 மில்லிமீட்டர் மழையும், ஆலங்காயம் பகுதியில் 9 மில்லி மீட்டர் மழையும், ஆம்பூர் ரயில் நிலையத்தில் 4.40 மில்லி மீட்டர் மழையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 43.30 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்றம்பள்ளி தாலுக்கா குருபவாணிகுண்டா கிராமத்தில் நாளை( நவ 18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம் நடைபெறும். இம்முகாமானது வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை மின்சார வாரியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் 14 துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் என மாவட்ட ஆட்சி தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று (16.11.2024) நடைப்பெற்ற பட்டியல் சரிபார்ப்பு முகாமில், வாணியம்பாடியில் -1270, ஆம்பூர் – 1075, ஜோலார்பேட்டை -920, திருப்பத்தூர் – 1373 என மொத்தம் 4638 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (16.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 936 புதிய வாக்காளர்கள், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 736 புதிய வாக்காளர்கள், ஜோலார்பேட்டை தொகுதியில் 661 புதிய வாக்காளர்கள், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 978 புதிய வாக்காளர்கள் மொத்தம் 3,311 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை இன்று பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் தோங்களில் ஆரிய ஒளியிலிருந்து கண்களை காக்கும் மூக்கு கண்ணாடிகளை விட விபத்து ஏற்படும் நேரங்களில் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை காப்பது தலைக்கவசமே என விழிப்புணவு செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.