India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி தாலுக்கா கொடையாஞ்சி, ஈச்சங்கால் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் மற்றும் அம்பலூர் காவல் நிலையத்தில் பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டபட்டி தேசிய நெடுஞ்சாலை,சுகர் மில் அருகில் இன்று காலை சென்னை நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் சார்பாக வரும் 8.12.2024 அன்று கராத்தே போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் கராத்தே மாஸ்டர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டிகள் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கிருஷ்ணா மஹால் நடைபெறுகிறது மேலும் தகவலுக்கு 919787969583 என்ற எண்ணை அழைக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (21.11. 2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், இந்தியன் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், ஃப்ரிட்ஜ் மற்றும் ஏசி மெக்கானிக் இலவச பயிற்சி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வரும் (23.12.2024) அன்று துவங்க உள்ளது. இந் நிலையில், அதற்காக விண்ணபங்களை, சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நேரில் வந்து அளிக்க மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் வரும் 30ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பத்தூர் ராமகிருஷ்ண மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முறையில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 38 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ், 0-6 மாதம் வயதுள்ள எடை மற்றும் உயரம் குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்த, தாய்-சேய் நலன் பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி பெருமாள் வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (19.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், காவலூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (19.08.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.