India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பள்ளியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அனைவரும் தங்களது குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (25.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதல் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் உள்ளடக்கிய ஆவணங்களை வரும் 20.12.2024 தேதிக்குள் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தென்னந்தோப்பு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனவும், இதனால் பள்ளிக்கு சென்று வர மிகுந்த சிரமம் உள்ளதாகவும், எனவே, உடனடியாக பனந்தோப்பு பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டி அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் மனு அளித்தனர்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர் ஒன்றியம் புதூர்நாடு மலைகிராம ஊராட்சியில் நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம், இன்று காலை 10:30 மணி அளவில் கொண்டாடப்படுவதையொட்டி மலைகிராமத்தில் நடைபெறுகிறது. இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரின் மனைவி தனலட்சுமி (19) என்பவருக்கு நேற்று (22.11.2024) திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் தனலட்சுமி அழைத்துக்கொண்டு வரும் வழியில் மலைப்பகுதியிலேயே ஆம்புலன்சில் தனலட்சுமிக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியை மாவட்ட விளையாட்டு நல அலுவலர் இனியன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 17 வயது வரை நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
Sorry, no posts matched your criteria.