India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தனது வலைதள பக்கத்தில் “உங்களது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம்” என பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும் கிரெடிட் கார்டு சம்பந்தமாக வரும் எந்த அழைப்புகளையும் செவி சாய்க்க வேண்டாம் எனவும், அது தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்கவும் என வலியுறுத்தியுள்ளது.
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுவோருக்கு ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்கள் வாழ்வின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை (29/11/2024) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய விவசாயிகள் கலந்து கொண்டு தீர்வு காண ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (29.11.2024) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த மடவாளம் தனியார் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஜூனியர் பிரிவில் ஜோலார்பேட்டை அரசு உதவி பெறும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆண்ட்ரியா தங்கப்பதக்கமும், சீனியர் பிரிவில் ஸ்ரீமதி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (27.11.2024) ஆம்பூர் நகர தி.மு.க சார்பில் ஆம்பூர் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு 1 சவரன் தங்க மோதிரத்தை திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் அணிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல பள்ளிகள் கலந்து கொண்டன. அரசு பூங்கா மேல்நிலைப்பள்ளி ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்த மாணவன் பிரவீன் குமாருக்கு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கினர். மாநில அளவிலான போட்டியில் தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவனை பாராட்டி சிவசக்தி நகர் நகர மன்ற உறுப்பினர் ஜீவிதா பார்த்திபன் வாழ்த்துக்கள் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 27.11.2024 இரவு ரோந்து காவலர் பெயர் மற்றும் தொலைபேசி எண் அறிவிப்பு ஜோலார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் அல்லது சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனடியாக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வாணியம்பாடியில் 3 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம்; ஆம்பூரில் 1.10 மில்லி மீ, வட புதுப்பட்டு1.50 மி மீ, ஆலங்காயம் 2.30 மி.மீ, வாணியம்பாடியில் 3 மி.மீ, நாட்றம்பள்ளியில் 0.00 மி.மீ கேத்தாண்டப்பட்டி 0.00 மி.மீ, திருப்பத்தூரில் 2.60.மி.மீ, ஆகிய இடங்களில் மழை அளவு பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 6 வட்டாரங்களிலிருந்தும், 18 குழுக்கள் வானவில் மன்ற அறிவியல் செய்முறை போட்டியில் பங்கேற்றன. இந்தக் குழுக்களிலிருந்து 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் நடைபெறவுள்ள வானவில் மன்றப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும்,மனப்பாடம் செய்வதை காட்டிலும் செய்து பார்த்து புரிதல் ஏற்படும் போது, வளமான கற்றல் திறன் கூடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.