India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (30.11.2024) தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் உள்ள குளியலறைகள், கழிப்பறைகள், பிற ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளைத் தொட வேண்டாம் எனவும் மின் விபத்துகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தோட்டக்கலை அலுவலர்கள் புவனேஸ்வரி, வினோதினி, நவீனா, பூங்கொடி, மற்றும் பிரபு ஆகிய ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்ய தோட்டக்கலைத்துறை இயக்குனரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பணியாற்றி வந்த நிலையில் நேற்று வேலூர் மண்டல டிஐஜி வெளியிட்ட அறிக்கையில், ஆம்பூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவழகனை பணியிடம் மாற்றம் செய்து, புதிய துணை காவல் கண்காணிப்பாளராக குமார் என்பவரை நியமனம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மை துறை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பா பருவ நெற்பயிர்களுக்கு இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் தங்களது நெற்பயிரை இன்று (30-11-2024) காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தி உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விரைந்து தாங்கள் பயிர்களை காப்பீடு செய்துகொள்ள அறிவித்து உள்ளது.
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, குடோனில் யாரும் இல்லாததால், நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த வெடி விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் எரிந்து நாசமாகின.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் 18 வயதை பூர்த்தியடையாதவர்களை ஒருபோதும் வாகனங்களை இயக்க அனுமதிக்காதீர்கள்! அவ்வாறு வாகனம் இயக்கும்போது அவர்களுக்கு மட்டுமில்லாமல் பிறர் உயிருக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைத் தீர்வு கூட்டம் ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் ஈரோட்டில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி நாட்றம்பள்ளி சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்து நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (30/11/2024) திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (28.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.