Tirupathur

News December 2, 2024

பயிர் சேதங்கள் தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் கனமான மழையால் விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து அந்தந்த வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவித்துள்ளனர். நாட்றம்பள்ளி 6381439335, 9362515789, மாதனூர் 9362515789, 9080010735, 9489923724, இணை இயக்குனர் அலுவலகம் 9894869814 மாவட்ட வேளாண்மை இயக்குனர் கண்ணகி அறிவித்துள்ளார்.

News December 2, 2024

ஆம்பூரில் போலி பெண் டாக்டர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் 2ஆவது தார்வழி பகுதியை சேர்ந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். இவர் ரம்யா கிளினிக் என்ற பெயரில் ஆம்பூர் சுற்றுபுற பகுதியில் உள்ள பெண்களுக்கு ரகசியமாக பல்வேறு ரகசிய நோய்கள் சம்பந்தப்பட்ட மருத்துவம் பார்த்ததால் ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 2, 2024

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம், ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அறிவித்துள்ளார். 

News December 2, 2024

திருப்பத்தூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று(டிச 2) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News December 1, 2024

திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News December 1, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (30.11.2024) காலை முதல் இன்று (01.12.2024) காலை 6 மணி வரை அதிகபட்சமாக வாணியம்பாடியில் ,51.00 மில்லிமீட்டர் மழையும், ஆம்பூர் பகுதியில் 79.00 மில்லி மீட்டர் மழையும், ஆலங்காயம் பகுதியில் 101.20 மில்லி மீட்டர் மழையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 416.50 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

மழைக்கால உதவி எண்கள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு பணிகளுக்காக “பேரிடர் மீட்புகுழுவினர்” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். பருவமழையின் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் உதவிக்கு 04179-221104, 9442992526, 04179-221103, 9159959919 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

ஏலகிரி விரைவு ரயில் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

image

ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 5.00 மணிக்கு இயக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த ரயிலில் பயணிக்க இருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

News November 30, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இன்று பரவலாக மழை பெய்துவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

திருப்பத்தூரில் அதி கனமழைக்கான எச்சரிக்கை

image

புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திருப்பத்துர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

error: Content is protected !!