Tirupathur

News December 5, 2024

எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ வரை படித்தவர்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சாலை நகரில் வரும் டிசம்பர் 9 அன்று மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். இதில் 8,10,12 மற்றும் ஐடிஐ தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் பங்கேற்கலாம்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 5, 2024

திருப்பத்தூரில் மாவட்ட அளவில் கலை போட்டிகள்

image

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 08.12.2024 அன்று நடைபெற உள்ளது. காலை 9.00 மணி முதல் 1 மணி வரை போட்டிகள் நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி மத்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சேர்க்கை மேளா (PMNAM) வரும் டிச.9ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கலை மற்றும் அறிவியியல் கல்லூரி சாலைநகர் திருப்பத்தூரில் நடைபெற உள்ளது.

News December 4, 2024

நாம் தமிழர் கட்சியில் இருந்து 30 பேர் விலகல்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விலகியதாக இன்று (04.12.2024) அறிவித்துள்ளனர்.

News December 4, 2024

கட்டுமான தொழிலாளர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 60 வய–துக்கு உட்பட்ட பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு https://www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

இன்றைய இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா உத்தரவின் பேரில் இன்று (03.12.2024) இரவு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான காவலூர், ஆலங்காயம், புதூர்நாடு உள்ளிட்ட காவல்நிலைய எல்லையில் ரோந்து பணியில் ஈடுப்படும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மக்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 3, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கும், இறைச்சிக்காக வெட்டுவதற்கும் அரசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 3, 2024

புதூர்நாடு மலைகிராமத்தில் 17 இடங்களில் மண்சரிவு

image

திருப்பத்தூர் அருகே புதூர்நாடு மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் 2-வது நாளாக 17 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. எனவே இரவு நேரங்களில் புதூர்நாடிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தெரிவித்து உள்ளார். மேலும், இந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

News December 2, 2024

இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா உத்தரவின் பேரில் இன்று இரவு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான காவலூர், ஆலங்காயம், புதூர்நாடு உள்ளிட்ட காவல்நிலைய எல்லையில் ரோந்து பணியில் ஈடுப்படும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மக்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!