Tirupathur

News December 9, 2024

இன்றைய இரவு ரோந்து பணிகாவலர்களின் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (09.12.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.

News December 9, 2024

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

 திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைப்பெறுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாத இரண்டாவது வார மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (09.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெறும் எனவும், இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது மனுவை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News December 9, 2024

தி.மலை செல்லும் பேருந்து நிலைய விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீபத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று வருகின்றனர். அதேபோல இந்த வருடமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்த்து தற்காலிக பேருந்து நிறுத்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பத்தூருக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் செங்கம் ரோடு மைதானம் அத்தியந்தல் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 8, 2024

சீட்பெல்ட் அணிய திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப் பக்கத்தில் இன்று (08.12.2024) ‘சீட்பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்குவோம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்’ என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படம் மூலம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

News December 7, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு இதுவரை ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

திருப்பத்தூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

image

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் வழியை மறித்து தடுப்பு சுவர் எழுப்பியது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை கொலை மிரட்டல் விடுத்தும் அவதூறாக பேசிய தினேஷ் என்பவரை ஆம்பூர் கிராமிய போலீசார் இன்று கைது செய்தனர்.

News December 6, 2024

திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

News December 6, 2024

திருப்பத்தூர் அருகே அம்பேத்கர் நினைவு நாள் விழா

image

டாக்டர் B.R.அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக கழகத்தின் சார்பாக மாடப்பள்ளியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஒன்றிய கழக செயலாளர் திருப்பதி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். மா.மு. நாகராசன் டாஸ்மார்க் மாவட்ட செயலாளர், நடராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

News December 6, 2024

திருப்பத்தூர் அருகே நாளை மின்தடை அறிவிப்பு 

image

திருப்பத்தூர் மாவட்ட செயற்பொறியாளர் பாட்ஷா முகமது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிச-7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பச்சூர், கொத்தூர், காந்திநகர், சுண்டம்பட்டி, டோல்கேட், முத்தனபள்ளி, சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனரி, பழையபேட்டை, புதுப்பேட்டை,நாட்றம்பள்ளி மல்லகுண்டா, ஜங்கலாபுரம், அதிபெரமனூர், தகரகுப்பம், ஜோலார்பேட்டை, குடியானகுப்பம் பகுதிகளில் மின்தடை.

News December 5, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வடபுதுப்பட்டு 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம் ஆம்பூரில் 12.60 மி மீ, வட புதுப்பட்டு 16.40 மி மீ, ஆலங்காயம் 10 மி.மீ, வாணியம்பாடியில் 6.10 மி.மீ, நாட்றம்பள்ளியில் 3.40 மி.மீ, கேத்தாண்டபட்டியில் 6.30மி.மீ, திருப்பத்தூரில் 5.70மி.மீ ஆகிய இடங்களில் மழை பெய்தது பதிவாகியுள்ளது.

error: Content is protected !!