India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
ஆசியாவின் இரண்டாவது சந்தன மரக் கிடங்கு திருப்பத்தூரில் கட்டப்பட்டுள்ளது. ஜவ்வாது மலைகளையும் அதன் அருகில் இரண்டாவது பெரிய சந்தனக் கிடங்கையும் கொண்டிருப்பதால் இது சந்தன மர நகரம் என்று புகழப்படுகிறது. இந்த மலை அதன் அற்புதமான சந்தன மர சாகுபடிக்கு பெயர் பெற்றது. எனவே “ஆம்பூர் பிரியாணி” உணவு உலகம் முழுவதும் பிரபலமானது. ஆம்பூர் பிரியாணியின் ருசியும் சந்தனத்தின் மணமும் திருப்பத்தூருக்கு புகழ் சேர்கிறது.
பீஹாரை சேர்ந்தவர் சுனில் (28) . இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் கூலி வேலைக்கு செல்வதற்காக சுனில், தனது 11 நண்பர்களுடன் சங்கமித்ரா ரயிலில் மைசூருக்கு நேற்று (மார்ச்.22) சென்றுள்ளார். ஆம்பூரை அடுத்த சின்ன கோமேஸ்வரம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது படிக்கட்டில் பயணம் செய்த சுனில் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. எனவே செங்கல்பட்டில் கேன் தண்ணீர் வாங்கும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறியுறுத்தல். ஷேர்
வாணியம்பாடி பிரியாணி என்பது திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடியில் சமைக்கப்படுவதாகும். ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க முகாலய உணவு முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. ஆற்காடு நவாப் அரசு வாணியம்பாடி பகுதியில் முகாலய பிரியாணியை சமைத்து பரிமாறிய பின் வாணியம்பாடி பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது. சீரக சம்பா அரிசியில் செய்யப்படுகிறது.
ஆம்பூர் பிரியாணி என்பது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் பிரியாணி வகை ஆகும். அசைவ உணவான இந்தப் பிரியாணியில் கோழி, ஆடு அல்லது மாட்டுக் கறி சேர்க்கப்படுகிறது. ஆம்பூர் பிரியாணியில் கைமா அரிசியை நெய்யுடன் கலப்பது இதன் தனித்தன்மைகளில் ஒன்றாகும். ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஷேர் செய்யுங்கள்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர், லம்பாடி காலணியை சேர்ந்தவர் ஜாபர். இவரது இரண்டரை வயது மகள் மரியம் பாத்திமா வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த டெட்டாலை குடித்துள்ளார். இதானல் மயக்கமடைந்த சிறுமியை பெற்றோர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் நாளை(மார்.22) காலை 10 மணியளவில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். புத்தக பிரியர்களுக்கு இச்செய்தியை பகிருங்கள்.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <
Sorry, no posts matched your criteria.