India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் ஏற்படும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12.12.2024 முதல்15.12.2024 வரை ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் – சிங்காரப்பேட்டை, செங்கம் வழியாக திருவண்ணாமலை விழுப்புரம்,கடலூர், புதுச்சேரி நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் மற்றும், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், வந்தவாசி வழியாக செல்ல அறிவிப்பு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (11.12.2024) காலை 8:30 மணி முதல் இன்று (12.12.2024) காலை 8:30 மணி வரை திருப்பத்தூரில் , 3.60 மில்லிமீட்டர் மழையும், ஆலங்காயம் பகுதியில் அதிகபட்சமாக 3.00 மில்லி மீட்டர் மழையும், நாட்றம்பள்ளியில் 3.20 மில்லி மீட்டர் மழையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 11.80 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வட்ட அளவிலான குறைத்தீர்வு முகாம் வன்னியபுதூர் நியாய விலை கடையில், நாட்றம்பள்ளி சந்திரபுரம் நியாய விலை கடை, ஆம்பூர் சின்னக்கொம்மேஸ்வரம், திருப்பத்தூர் மண்டல வாடி நியாய விலைக் கடையில் வருகின்ற 14.12.2024 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 11 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மேம்பாலத்தில் இன்று ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வரும் 13-ஆம் தேதி மலையில் தீபம் ஏற்றுவது முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து ரெகுலர் பஸ் 121 பஸ்களும் மற்றும் சிறப்பு பஸ்கள் 10, ஆம்பூர் பணிமனையில் இருந்து 10 சிறப்பு பஸ்கள் உள்பட 141 பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுவதாக போக்குவரத்து கிளை மேலாளர் குமரன் இன்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஜோதி மஹாலில் இன்று(டிச 10) காலை மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால், இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் வெண்ணிலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சுந்தரபாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.