Tirupathur

News December 13, 2024

சிறுபான்மையினருக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் டிச.18ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News December 13, 2024

திருப்பத்தூர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைப்பெறவிருந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் முகாம் நிர்வாக காரணத்தினால், ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனை ஈடுசெய்யும் விதமாக வரும் 20.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. இந்த குறைதீர்வு முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள ஆட்சியர் தர்ப்பகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 13, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்கல்விக்கான நேரடி சேர்க்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த தொழிற்கல்வி பெறுவதற்கான நேரடி சேர்க்கை மூலமாக திருப்பத்தூர் மாவட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரம்பு வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த தொழிற்கல்வி பயில பத்தாம் வகுப்பு பெற்றிருந்தாலே போதுமானது.

News December 13, 2024

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில தினங்களாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாங்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் சேதங்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 34 மி.மீ மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 34 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம்; ஆம்பூரில் 25 மில்லி மீ, வட புதுப்பட்டு 27மி மீ, ஆலங்காயம்16.80 மி.மீ, வாணியம்பாடியில் 15.50 மி.மீ, நாட்றம்பள்ளியில் 29.60மி.மீ, கேத்தாண்டபட்டியில் 21மி.மீ, திருப்பத்தூரில் 34மி.மீ ஆகிய இடங்களில் மழை பெய்தது பதிவாகியுள்ளது.

News December 13, 2024

திருப்பத்தூரில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ 12) அதிகாலை வரை கனமழை பெய்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்தார். இந்நிலையில் இன்று (13.12.2024) திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

விடுதி குறைப்பாட்டால் 3 பேர் பணியிடை நீக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாணவ, மாணவி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதற்கான சிறப்பு ஆய்வு கூட்டம் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 3 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார்.

News December 12, 2024

திருப்பத்தூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News December 12, 2024

திருப்பத்தூர் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

image

திருப்பத்தூர் மாவட்டம் தமிழில் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய 3 பிரிவுகளில் இலக்கியப் போட்டிகள் நடைப்பெற உள்ள நிலையில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகத்தில் வெளியிட உள்ள நிலையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி 31.12.2024 மாலை 5 மணிக்குள், தங்களது படைப்புகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News December 12, 2024

குழந்தை திருமணத்தை தடுக்க திருப்பத்தூர் காவல்துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதனை தடுப்பதற்காக காவல்துறையின் சார்பில் குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தைகளின் எதிர்காலத்தை காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

error: Content is protected !!