India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திர பகுதியின் எல்லைப்பகுதியாக உள்ளது. எனவே, பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கி அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதன்படி, நடப்பு ஆண்டில் இது வரை 121 டன் அரிசியும், கடத்த–லுக்கு பயன்படுத்திய 46 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கி அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்தியதாக இந்த ஆண்டில் மட்டும் 121 டன் அரிசியும், 46 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகாமையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போராட்டம் குறித்த மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே.சி.வீரமணி தலைமையில் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நாளை காலை 9 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் காவல்துறை சார்பில்,வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கத்தில் இன்று குழந்தைகளுக்கு ஏற்படும், இன்னல்கள், குழந்தை திருமணத்திலிருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள் 1098 என்ற வாசகத்துடன், விழிப்புணர்வு படத்தை பதிவிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் இன்று மாலை நான்கு மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அன்றாட பதிவேடுகளை பார்வையிட்டார். ஆய்வின் போது கஞ்சா உள்ளிட்ட குற்றங்களின் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தாமலேரிமுத்தூர் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் தலைமையில் இன்று நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 12 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சில இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.