Tirupathur

News December 31, 2024

வீட்டில் பதுக்கி 5 .1/2 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது

image

 நாட்றம்பள்ளி அடுத்த கிணற்று கொள்ளை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 1/2 கிலோ கஞ்சாவை திம்மாம்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. போலீசார் முருகன் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 30, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 30, 2024

திருப்பத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (டிச 30) அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில், அண்ணா பல்கலை கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டலை கண்டித்தும், திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைப்பெற இருந்தது. இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், அதிமுகவினர் திருப்பத்தூர் நகரில் குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News December 30, 2024

குடும்ப நடத்த வர மறுத்த மனைவிக்கு வெட்டு; கணவன் கைது

image

 ஓசூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கும் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி சேர்ந்த பிரித்தா ஆகிய இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் பிரித்தா தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று பிரபு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்தால் கத்தியால் வெட்டியுள்ளார். போலீசார் பிரபு கைது செய்தனர்.

News December 29, 2024

இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்சம்பவங்களை தடுக்க இன்று (29.12.2024) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், , , ஆலங்காயம், ஆம்பூர், திம்மாம்பேட்டை வாணியம்பாடி, உள்ளிட்ட காவல்நிலைய எல்லையில் ரோந்து பணியில் ஈடுப்படும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

ரயிலில் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு கோவை நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 163 சவரன் நகை, ரூபாய் 48 லட்சம் பணம் கொள்ளை அடித்த மும்பையை சேர்ந்தவர்களில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் இருந்து 12 சவரன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

News December 29, 2024

ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நாளை (டிசம்பர் 29) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளிக்கலாம். அதன்பேரில் ஆட்சியர் மனுக்கள் மீது உடனடியான தீர்வுகளை வழங்குவதால் மக்கள் நம்பிக்கையுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

திருப்பத்தூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் சட்ட ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக  சார்பில் நாளை காலை 9 மணியளவில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து கிளை கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

News December 28, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் நிலைய காவல் அதிகாரிகளின் அழைப்பு எண்களுடன் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 28, 2024

ஆம்பூரில் 2 போலி மருத்துவர்கள் கைது

image

ஆம்பூர் அருகே மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ துறை இணை இயக்குனருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று தீவிர ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடித்தனர். இதனையடுத்து, கிளினிகிற்கு சீல் வைக்கப்பட்டது.

error: Content is protected !!