Tirupathur

News January 2, 2025

திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து மற்றும் நாட்டறம்பள்ளி என 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.

News January 2, 2025

புத்தாண்டில் பிறந்த 8 குழந்தைகள்

image

திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புத்தாண்டாடில் 8 குழந்தைகள் பிறந்ததாக அரசு மருத்துவமனை அலுவலர் தெரிவித்தார்.

News January 2, 2025

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த ஆட்சியர்

image

ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் இன்று (01.01.2024) இரவு 8 மணி அளவில் ஒகேனக்கலில் இருந்து காட்பாடி நோக்கிச்சென்ற சுற்றுலா சென்ற வேன் விபத்துக்குள்ளாகி 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

News January 1, 2025

திருப்பத்தூரில் ரூபாய் 4.75 கோடிக்கு மது விற்பனை 

image

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூபாய் 3 கோடி வரை விற்பனை நடப்பது வழக்கம். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரேநாளில் ரூபாய் 4.75 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆங்கில புத்தாண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவு என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 1, 2025

திருப்பத்தூர் மக்களே இந்த ஆண்டு என்ன RESOLUTION?

image

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் களைகிட்டியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுவாக, புத்தாண்டு என்றாலே என்ன Resolution?என்ற கேள்வி நம்மில் பலர் கேட்பதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு என்ன Resolution எடுத்திருக்கிறீர்கள்? கடந்த ஆண்டு எடுத்த Resolution நிறைவேறியதா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.

News January 1, 2025

கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட எஸ்.பி 

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கேக் வெட்டி காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

News December 31, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் புத்தாண்டு வாழ்த்து

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (31-12-2024) இரவு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு அனைவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் செய்தியை மக்களுக்கு வெளியிட்டுள்ளது.

News December 31, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிமுகமில்லாத எண்களில் இருந்து குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி மக்களை நம்பவைத்து மற்றும் வங்கி விவரங்களை பெற்று ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவதால் மொபைல் போன் மூலம் வரும் அழைப்புகளில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

News December 31, 2024

பள்ளி எதிரே உள்ள பாரை அகற்ற ஆட்சியரிடம் விசிகவினர் மனு

image

திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் புறவழிச்சாலையில் ஏற்கனவே 3 மதுபான கடைகள் உள்ள நிலையில், பள்ளி எதிரே மேலும் புதியதாக பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாகவும், உடனடியாக பள்ளி எதிரே உள்ள பாரை அகற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று (டிச 31) மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் மனு அளித்தனர்.

News December 31, 2024

திருப்பத்தூரில் மிதிவண்டி போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் வரும் (04.01.2025) அன்று 13,15,17 வயது உட்பட்டோருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்ற விருப்பமுள்ளவர்கள், பள்ளி சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு, ஜோலார்பேட்டை சிறுவிளையாட்டு அரங்கத்தில் 04.01.2025 அன்று காலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என திருப்பத்தூர் ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!