India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில்வே மார்க்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று (ஜன 5) சுமார் 19 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ நல்லதம்பி முன்னிலையில் நேற்று இரவு (ஜன. 04) திருப்பத்தூர் ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் கேசவன் தலைமையில் 40 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த அனைவருக்கும் அ நல்லதம்பி எம்.எல்.ஏ கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து வரவேற்றார்.
ஆலங்காயத்தில் 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பட்டு நூற்போர் சேவை தொழிற் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை, 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் பட்டு பஞ்சுக்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஆனால், இவை முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் 25 கி.மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி, மோகன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் 1 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த துவரஞ்செடியை காணவில்லை என இன்று (03.01.2025) குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து அந்த பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க…
14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க..
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைப்ரஸ்’ என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயப் பகுதிகள், வன பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு Azithromycin, Doxycycline போன்ற மாத்திரைகளை பயன் படுத்தலாம். இருப்பினும், மருத்துவர்களை அணுகுவது நல்லது.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.01.2025) நடைப்பெற்றது. இதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன் நாளை முதல் (03.01.2025) விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வாணியம்பாடி சுற்று புற பகுதியில் இன்று (ஜன.02) காலை முதல் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதிமுக சார்பில் ‘யார் அந்த SIR?’ என்றும், திமுக சார்பில் ‘WE ARE SAFE IN TAMILNADU’ என்றும் போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.