India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கவும், முகவரி மாற்றவும் முதலியவை மேற்கொள்ள அவரவர் பகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடைபெற இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப் பக்கத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒருவரின் உயிரை காப்பற்ற உதவினால், நீங்களும் மருத்துவர்களே என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படம் மூலம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும் பிரதம நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் 100 % மானியத்தில் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்தில் நுண்ணுயிர் பாசன கருவிகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இப்பொருட்களை பெற்று பயன்படுத்தாமல் விற்பனை செய்தால் அனைத்து மானியமும் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (11.11.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், அமுதா என்பவரின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆட்சியர் தர்ப்பகராஜ் அமுதாவிடம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (11.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகின்ற 15.11.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. குறைதீர்வு கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி நிவர்த்தி பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
21 வது மாநில அளவிலான சப் ஜூனியர் பிரிவுக்கான வூசு போட்டிகள் திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட 600 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நித்திஷ் 3 தங்கம், கனிஷ்கா 1 வெள்ளி, சித்தேஷ், பாரதி மற்றும் கலைவாசன் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 16.11.2024 நடைபெற இருப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த விளம்பர ஒலிபரப்பு வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் எதிர்வரும் நவ. 16 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர் விஜய் சாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.