India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (07.01.2025) பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் சத்துணவு சாப்பிட்ட பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சுற்றுசுவர், கழிப்பறை இல்லாத பள்ளிகள் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரோட்டரி கிளப் ஆப் ஆம்பூர் நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜன.11 ஆம் தேதி ஆம்பூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 8825662644, 8754542234, 9840674222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜவகர் பாபு தலைமையிலான தொல்லியல்துறையினர் இன்று (07.01.2025) கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்லவர் கால நரசிம்ம வர்மனுக்கும், சாளுக்கிய மன்னனுக்கு இடையே நடைப்பெற்ற போரில் உயிர்நீத்தவர்களுக்கு வைக்கப்பட்ட நடுக்கல்லை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர்.
திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவரை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சந்துரு ஆகிய இருவரை இன்று (07.01.2025) திருப்பத்தூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையால் 2024-25 ஆம் ஆண்டுக்கான மொபைல் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக விவசாயிகள் திருப்பத்தூர் வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் 9790413862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.
காட்பாடி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் 2021 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி மீது பிராமண பத்திரத்தில் சரியான தகவல் தரவில்லை என தேர்தல் ஆணையம் மூலம் புகார் தெரிவித்ததின் பேரில் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று கே.சி வீரமணி 2ஆவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற வாராந்திர திங்கட்கிழமை குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 240 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக பெற்றுக் கொண்டார்.
ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ஜெய் மாதா நகரைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பதற்கு முன்பு ஓடும் ரயிலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் விசாரணை செய்கின்றனர்.
திருப்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதனால் ‘ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா பரவுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த வகை வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், ஸ்கரப் டைபஸ் என்ற பாக்டீரியா பரவல் திருப்பத்தூரில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் நேற்று (04.01.2025) இரண்டு பெண் குழந்தைகளை தாய் விட்டுச்சென்ற நிலையில், குழந்தைகள் குறித்து கருணை இல்ல நிர்வாகிகள், நகர காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கமல் தலைமையிலான அதிகாரிகள் குழந்தையை அவரது தந்தையான ராஜேஷ் என்பவரிடம் இன்று (05.01.2025) ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.