India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த நரசிம்மன்(17) என்ற சிறுவனை கடந்த ஜன.4ஆம் தேதி கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த பிரவீன் என்ற இளைஞர் நேற்று ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில், பிரவீன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழங்குடியினர் அலுவலகத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஜிடிபி வளாகத்தில் வரும் ஜனவரி 24 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சுமார் 12 க்கு மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு தரப்பினரிடம் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் கிராம மக்கள் வாணியம்பாடி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (19.01.2025) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் நேற்று வெள்ளை நிற நுரைப்பொங்கி ஓடியது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டறம்பள்ளி அருகே லட்சுமிபுரம் அருகே கிருஷ்ணகிரி- சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 வயது உடையவர் சாலையோர இறந்து கிடந்த நிலையில், இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை செய்ததில் அரசம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பது தெரியவந்தது. இவர் சமையல் மாஸ்டர் எனவும், இன்று காலை புதுமனை புகு விழாவில் சமையல் செய்ய சென்ற போது விபத்தில் இறந்தது தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தபடி அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குடியிருப்பு, வணிக நிறுவனங்கள், உணவகம், மளிகை கடைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், பொது மக்கள் கலந்து கொள்ளும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவோம். பாதுகாப்பாக இருப்போம் என அனைத்து காவல் நிலையத்தின் முலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்டம் காவல்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து தினசரி காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலம் வரை மற்றும் மீண்டும் சேலத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் 16087,16088 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு ரேக் செல்ல உள்ளதால் இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவிற்கு, முன்னாள் சரித்திர பதிவேடு குற்றவாளியை சிறப்பு விருந்தினராக அழைத்து கொண்டாடிய காவல் துறையினர் 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.