India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்ற சிவ சவுந்தரவள்ளி முதல் நாளிலேயே ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடை, மருத்துவமனை, அரசு பள்ளி, நகராட்சி அலுவலகம் என சுழன்று சுழன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பல்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். இவரின் பணி சிறக்க வாழ்த்தலாமே!. ஷேர் பண்ணுங்க.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்.11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000- ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <
யாரேனும் செய்வினை, புதையல் அல்லது எந்தவொரு மாயத்திறன் மூலம் பணம் அல்லது செல்வத்தை வழங்குவதாக கூறினால் அதை உடனடியாக நம்புவதை தவிர்க்கவும். இது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம். மேலும் நம்பகமான ஆதாரங்கள் இல்லாத வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. தற்பொழுது இது அந்த பகுதியில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தர்ப்பகராஜ் திருவண்ணாமலை ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தின் 5வது புதிய ஆட்சியராக சிவ சவுந்தரவள்ளி இன்று திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்று கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் நேற்று காலை வாணியம்பாடியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, சம்பந்திகுப்பம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயேஅவர் உயிரிழந்துள்ளார், இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி சேர்ந்தவர் தமிழ்வாணன் பால் வியாபாரம் செய்து வருகிறார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது அதில் காஞ்சிபுரத்தில் ஒரு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தின் பெயரில் ஜி.எஸ்.டி. வரி பாக்கிய ரூ.59 லட்சத்து 8 ஆயிரம் கட்டவேண்டும் என வந்துள்ளது என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார்
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக மோகன சந்திரன் நியமிக்கப்பட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று திடீர் மாற்றம் செய்து மோகன சந்திரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். இதனால், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவசௌந்தரவள்ளி நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்ற பெங்களூர் சிட்டி முதல் ஜோலார்பேட்டை வரை வரும் பேசஞ்சர் வண்டியில் குறிப்பிட்ட கோச்சின் கழிவறையில் பகுதியிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வருவதாக தகவல் தெரிவித்ததன் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது வட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடந்து முடிந்த குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய 37 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டன. அதில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
கொரட்டி சேர்ந்தவர் கிருஷ்ணன் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லாததால் சில நாட்களாக விரக்தியில் இருந்த கிருஷ்ணன் நேற்று வீட்டின் அருகே தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.