India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் வருகின்ற 29/3/2025 அன்று காலை 11 மணியளவில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம கூட்டம் நடைபெற மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி உத்தரவு, இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை விவாதித்தல், சுத்தமான குடிநீர் வினியோகம் செய்தல், கலைஞர் கனவு இல்லம் குறித்து விவாதித்தல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ளவும் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆன்லைன் கேம் விளையாடுவதால் இணையத்தில் மக்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆன்லைன் கேம் விளையாடும் நபர்களின் பணத்தை இழக்க நேரிடும். எனவே ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறும்போது, வறண்ட வானிலை காரணமாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மார்ச் 27 முதல் 31 வரையிலான 5 நாட்கள் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் மேல்) நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் மூன்று குடும்பங்களை 10 நாட்களாக ஊரை விட்டு ஒதுக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திருவிழாவின்போது கோயில் அருகில் கூட வரக்கூடாது வந்தால் என்ன நடக்கும் தெரியாது என மிரட்டும் நிர்வாகிகள். குடிநீர் எடுக்க கூட செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு.
ஏலகிரியில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவரின் சொந்தமான இடத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் என்று வழங்கப்பட்ட பெயர் இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.
ஏலகிரி – அழகிய மலைவாசஸ்தலம். ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் மிகவும் பிரபலம். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி – பல்வேறு மூலிகை செடிகளை கடந்து செல்வதால் இந்த அருவியில் குளித்தால் நோய்கள் குணமாகும். வைன்னு பாப்பு அப்சர்வட்டரி – இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி, சுவாமிமலை – ட்ரெக்கிங் ஸ்பாட், நிலாவூர் ஏரி – ரம்மியமான அமைதியான இடம், கோவிந்தபுரம் அருவி – ஆர்ப்பரிக்கும் அழகு. ஷேர் செய்யுங்கள் மக்களே!
திருப்பத்தூரில் வருகின்ற மார்ச் 28, 2025 அன்று நடைபெறவிருக்கும் மாணவர் வழிகாட்டி 2025 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியானது திருப்பத்தூரில் உள்ள டி.சி.ஆர் மங்கல மஹாலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று(மார்.25) காலை ஊத்தங்கரை பகுதி சேர்ந்த புஷ்பா திருப்பதிக்கு நடைப்பயணம் சென்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.