Tirupathur

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

வாணியம்பாடியில் வாகனம் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காளிதாஸ் என்ற தலைமை காவலர் நேற்று (13.02.2025) பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்துள்ளார், இவ்விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News February 14, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் வாகனங்கள் ஓட்டும்போது, வாகன ஓட்டிகள் தவறாமல் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளது. இதன்மூலம் பயணத்தின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக செல்லலாம்.

News February 13, 2025

நாட்றம்பள்ளி அருகே கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில், சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கவிதா என்ற பெண்மணியும் காரில் வந்த ஒரு இளைஞரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து கொள்ளை

image

திருப்பத்தூர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (31) என்பவர் வீட்டுக்கு கடந்த பிப்.03 அன்று நள்ளிரவு நேரத்தில், வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், வீரபத்திரன், அவரின் மனைவி சத்யா (28) ஆகியோரை கத்தியால் வெட்டினர். மேலும், சத்யாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த நபர்கள், 15 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் காட்பாடியைச் சேர்ந்த 5 பேரைக் நேற்று கைது செய்தனர்.

News February 12, 2025

ஆன்லைனில் முன் பணம் கட்டி ஏமாற வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று தனது சமூக வலைத்தளத்தில், பொது மக்கள் ஆன்லைனில் வாகனம் வாங்கும் போது முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News February 12, 2025

மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி இடமாற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, உமராபாத் மற்றும் ஆம்பூர் நகர காவல்நிலையங்களில் பணி புரியும் தனிப்பிரிவு காவலர்களை அதிரடியாக மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று (12.02.2025) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 12, 2025

மலையாம்பட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மலையாம்பட்டு ஊராட்சி அனுமந்தராயபுரம் பகுதியில் நேற்று தேசிங்கு ராஜ் வயது (56) என்பவர் வீட்டில் அரசு அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டுக்கு பறிமுதல் செய்து நேற்று இரவு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!