Tirupathur

News September 11, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரால் கீழ்கண்ட கிராமங்களில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.திருப்பத்தூர் ஏழருவி,நாட்றம்பள்ளி வெலக்கல் நாத்தம்,வாணியம்பாடி நடு பட்டறை,ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் மேற்கண்ட குறைதீர் முகாம்
நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

News September 11, 2024

திருப்பத்தூர் அருகே காவலரை தாக்கிய இன்ஸ்பெக்டர்

image

திருப்பத்தூர் அருகே ஜில்லா ரோடு பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஆயுதப்படை போலீசார் வீரப்பன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.அப்போது ஆம்பூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி என்னை தாக்கினார். இதனை கேட்ட போது உன் மீது ரிப்போர்ட் கொடுத்து விடுவேன் என மிரட்டினார். இதனையெடுத்து வீரப்பன் நேற்று திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

News September 10, 2024

ஜோலார்பேட்டையில் போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை விளையாட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்துகொண்டு கொடி அசைத்து தடகள போட்டியை துவக்கி வைத்தனர்.

News September 10, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை போஸ்டர் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்து விளக்கினார். மழை நேரங்களில் சிரமம் அகற்ற பயனளிக்கும் வழியாகும். பயணம் செய்யும் நேரத்தில் தூசி அடித்தல் போன்ற விளைவுகளில் இருந்து காக்கும். விபத்து ஏற்படும் நேரங்களில் நம் தலைமுறையையும் காக்கும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

News September 10, 2024

திருப்பத்தூர் அருகே போலீஸ் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் ஆம்பூர் DSp அறிவழகன், 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 11 காவல் ஆய்வாளர்கள், 69 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 452 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News September 10, 2024

திருப்பத்தூர் அருகே இரண்டரை வயது குழந்தை மரணம்

image

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது இரண்டரை மகன் சர்வேஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2024

திருப்பத்தூர் அருகே கேக் வடிவத்தில் மலைப்பகுதி

image

ஏலகிரி மலைத்தொடரின் உச்சியில் ஒரு கேக் வடிவத்தில் அமைந்திருக்கும் சுவாமிமலை மலையேறுபவர்களுக்கு மிகவும் பிடித்த பகுதியாக நிச்சயம் இருக்கும். புங்கனூர் ஏரியிலிருந்து 3.5 கி.மீ. தூரத்திற்கு ட்ரெக்கிங் செய்து சுவாமிமலை உச்சியை அடைய வேண்டும். இம்மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது.மேலும் சுவாமி மலை ஏலகிரியில் உள்ள மங்கலம் கிராமத்திலிருந்து தொடங்குகிறது.

News September 10, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் நலத்திட்ட உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் தர்பக ராஜ் தையல் இயந்திரம் வழங்கினார். உடன் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News September 9, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் ‘தங்களது வங்கி கணக்கு காலாவதியாகிறது என்று வரும் செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம்’ என பொது மக்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News September 9, 2024

வாணியம்பாடியில் காவல்துறையினர் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 11 காவல் ஆய்வாளர்கள், 69 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 452 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.