India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் குமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் தான் ஹரிணி ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் சீனிவாசனின் அண்ணன் பேசுவதாக கூறி 8 சிற்பம் அரிசி மூட்டை மற்றும் 3 டின் கோல்டு வின்னர் ஆயில் ஆகியவற்றை ஏமாற்றிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பத்தூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட குறைதீர்வு முகாம் வருகிற 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏழருவி, வெலக்கல்நத்தம், நடுப்பட்டறை, விண்ணமங்கலம், ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், சமூக வலைதளங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்ளை கண்டு ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து உண்மையானதா என உறுதி செய்த பின் பொருட்கள வாங்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
திருப்பத்துார் பகுதியை சேர்ந்தவர் சரவணன் தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பிரேக் பிடித்து பைக்கை நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது பைக் பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதனால் காரில் பயணம் செய்த அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து 4 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த அம்மணாங்கோவில் உள்ளிட பகுதியில் நேற்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அபோது மக்கள் சில அடிப்படை வசதிகள் கோரிய நிலையில், வாரத்தில் 2 நாட்கள் ஊராட்சி பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அப்போது பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் பேடிஎம் கூகுள் பே இம்முறையில் பணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்கள்.
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் வீட்டில் மது பாட்டில் வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது குடித்து வந்தார். இந்நிலையில் இன்று மது பாட்டில் என நினைத்து பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11.00 மணியளவில் ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையில் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மாவட்ட விவசாயிகள் இதில் தங்களது குறைகளை கூறி தீர்வு கண்டுபயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே பெற்றோர்கள் சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பேனர் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.