India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் இன்று (25.01.2025) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாபெரும் பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்து, பிளாஸ்டிக் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்தப்பட்ட வேலைவாய்ப்புத்திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தேர்வு செய்த பழங்குடியின இளைஞர்களை மாநில அளவில் நடத்தப்படும் பயிற்சியில் கலந்துக்கொள்ள நேற்று (24.01.2025) பேருந்தில் வாழ்த்தி ஆட்சியர் தர்ப்பகராஜ் வழி அனுப்பி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நேற்று (24.01.2025) நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, தேர்வானவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற்காலிகள் நவீன காது கேட்கும் இயந்திரம் ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முகாம் ஜனவரி 29 அன்று நாட்றம்பள்ளி பிடிஒ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் இன்று (24.01.2025) ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வாழ்த்து அட்டை வழங்கி சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்வு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பச்சூர் அருகே சொத்தமலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சோதனை செய்தனர். அதில் கடையில் இருந்த குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மகேஸ்வரி (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
திருப்பத்தூரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் “தூய நெஞ்சக் கல்லூரியில்” உங்கள் வெற்றி எங்கள் நோக்கம் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை 24.01.2025 நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இதில், திருப்பத்தூர் மாவட்ட பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Sorry, no posts matched your criteria.