Tirupathur

News September 17, 2024

திருப்பத்தூரில் ஒரே நாளில் 5.20 கோடிக்கு மது விற்பனை

image

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிலாடி நபி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று (செப்.17) விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று கடைகளில் குடிமகன்கள் அதிக அளவில் மதுபானங்கள் வாங்கினர். இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 114 கடைகளில் தினசரி 4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5.20 கோடிக்கு விற்பனை ஆனது.

News September 17, 2024

திருப்பத்தூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

image

திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள கே.ஜி.ஆர்.திடலில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். அவர் பேசுகையில், அண்ணா பற்றி பொதுக்கூட்டத்தில் பேசவும், அண்ணாவைப் பற்றிய அனைத்துக்கும் அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று கூறினார்.

News September 17, 2024

திருப்பத்தூரில் போலீசாருக்கான குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகள், போலீசாருக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட எஸ்பி தலைமை வகித்தார். இதில், கஞ்சா, போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசாரின் பணி என்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும் குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

News September 16, 2024

திருப்பத்தூரில் நாளை டாஸ்மாக் விடுமுறை ஆட்சியர் தகவல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகள் பார்கள் நாளை மிலாடி நபி முன்னிட்டு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் அறிவிப்பு நாளை மதுபானங்கள் விற்பனை மற்றும் பார்கள் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்ததுள்ளார்

News September 16, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பேஸ்புக் வலைத்தள பதிவில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில் பொதுமக்கள் தங்கள் பணத்தை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக அரசு அனுமதி பெற்றுள்ளதா என்பதை அறிந்த பிறகு முதலீடு செய்யவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 16, 2024

வாணியம்பாடியில் ஒரே மேடையில் சமத்துவ திருமணம்

image

வாணியம்பாடி அடுத்த மாறப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் 16 ஜோடிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மூன்று முறை படி திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜேசிஐயின் வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு திருமண விழாவினை தலைமையேற்று நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

திருப்பத்தூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பயனாளி ரூ.15 செலுத்தி இந்த ஊட்டச்சத்து தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்றும், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆதார் கார்டு நகலை கொடுத்து இந்த தொகுப்பினை வாங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 15, 2024

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பணிமனையில் அமைந்துள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கழகச் செயலாளர் மதியழகன் முன்னிலையில் தொழிற்சங்கத்தின் கொடி ஏற்றி திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இதில் முருகன், பாஸ்கர், வழக்கறிஞர் பிரேம்குமார்,மோகன், குமார், பிரகாஷ்,ஹரிகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

10 நிமிடத்தில் மாணவரை மீட்ட போலீசார்

image

திருப்பத்தூர் வடக்கு முத்தப்பர் தெரு பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் அபினேஷ்(14). இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து தாமதமாக வீட்டிற்கு சென்றதற்காக அவரது தந்தை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபினேஷ் நேற்று யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் தகவல் அறிந்த 10 நிமிஷங்களில் நகராட்சி பூங்காவில் பதுங்கி இருந்த மாணவனை மீட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

News September 14, 2024

திருப்பத்தூரில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வரும் செப்.17 ஆம் தேதி முதல் செப்.24 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சுய உதவிக்குழுகள் பெண்கள் பங்கேற்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பதராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த நிகழ்வில் பல்வேறு ஊட்டச்சத்து சார்ந்த நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.