Tirupathur

News February 2, 2025

டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் மல்லங்குப்பம் பகுதியில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜன.பிப்.1) டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது, 7ஆம் வகுப்பு மாணவன் பிரசன்னா திடிரென தவறி விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த அவன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 1, 2025

நண்பன் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

ஆம்பூர் அருகே ராமசந்திரபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், மணிகண்டன் இருவரும் நண்பர்கள். மணிகண்டன், தனது மனைவி சாந்தியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மனைவி நடத்தையில் சந்தேகத்தால், மணிகண்டன், நண்பர் ராஜேஷ் மீது 2020 ஆண்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். இவ்வழக்கில் நேற்று திருப்பத்தூர் கோர்ட்டு மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

News January 31, 2025

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த க.தர்ப்பகராஜ் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை இன்று தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளனர்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் கள்ளச் சந்தையில் தமிழக அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் குடும்ப அட்டைதாரர்களை பண்டங்கள் இல்லா அட்டைகளாக மாற்றப்படும் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

வாணியம்பாடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

image

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனுர் பைபாஸ் கூட்டு சாலையில் நேற்று நள்ளிரவு தூக்க கலக்கத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது. அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் ஓட்டுநரை உடனடியாக மீட்டனர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த ஓட்டுநரை உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

News January 31, 2025

உழவர் அட்டை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்

image

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று (31.01.2025) காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மருத்துவம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், இதில் பங்கேற்று பயனடையும்மாறு, பயனடையுமாறு, தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News January 31, 2025

ரேஷன் அரிசியை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை குடிமைப்பொருள் வழங்கல், குற்ற புலனாய்வு போலீசார் உள்ளிட்டோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ரேஷன் அரிசியை  கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பண்டங்கள் இல்லாத ரேஷன் கார்டு மாற்றப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 31, 2025

விவசாயிகளுக்கு இன்று கடைசி நாள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெல் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இன்று (31-01-2025) கடைசி நாள் என்பதால் மாவட்டத்தில் உள்ள காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளை மாலைக்குள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்ய மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

News January 31, 2025

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

image

திருப்பத்தூர் அருகே பூரிகமாணிமிட்டா‌ பகுதியைச் சேர்ந்தவர் மாரி இவர் கதிரிமங்கலம் பகுதியில் மின்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். கதிரிமங்கலம் பகுதியில் திடீரென மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு பழுது சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார். இது குறித்து  திருப்பத்தூர் தாலுகா போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!