India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 16 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நேற்று நடந்த அதிரடி சோதனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்து 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேரை கைது செய்து ரூ.25000 அபராதம் விதித்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
திருப்பத்தூர் தாலுக்கா குரிசிலாப்பட்டு ஏலகிரி மலை வனப்பகுதி அருகில் விவசாய நிலத்தில் மின் வேலியில் வனவிலங்குகள் வேட்டையாட சென்ற 3 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று மாலை திருப்பத்தூர் வனசரகர் சோலைராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். வனப் பகுதிகளில் மின்வேலி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும், வனப் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் வனத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
நாட்டறம்பள்ளி அடுத்த நாயன செருவு பகுதியில் போதிய மின்சாரம் மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக விவசாயிகள் பயிர் செய்த நெற்பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்க முடியாததால் 10 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை செய்ய முடியாமல் காய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் சீராக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் பழைய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளார். மேலும், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊர்ல மழையா?
வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சின்ன கண்ணு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அருகே இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட வசந்த்குமார் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து அவரின் செல்போன் உரை உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 12 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றது. பல்வேறு கல்வி தகுதியுடைய 176 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு அதில் 35 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணையை மாவட்ட வேலைவாய்ப்பபு அலுவலர் கஸ்தூரி வழங்கினார்.
ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் 29/9/2024 அன்று காலை 6 மணியளவில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதுக்குள் ஆண் பெண் என இரு பிரிவினருக்கும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் என இரு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவரும் உடற்தகுதி சுய உறுதிமொழி படிவம் நேரில் வந்து தர வேண்டும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.