India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய 3 பிரிவுகளில் இலக்கியப் போட்டிகளை நடத்தி அவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 20 சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து அவற்றைப் புத்தகமாக அச்சிட்டு வருகிற 2025 பிப்ரவரி மாதத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் காவல் துறை சார்பில் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் ‘உனது பாதுகாப்பு உன் கையில். பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டினால் நீங்கள் மட்டுமின்றி காரில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (பிப்ரவரி 7) மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரளமான திருநங்கைகள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிவ சௌந்தரவள்ளி உறுதியளித்தார்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் நேற்று கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து இருந்து சித்தூர் செல்ல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும்போது அதே பெட்டியில் பயணம் செய்த கே.வி.குப்பம் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்டார் இதனையடுத்து இன்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் அல்லது தகவலை நேரிலோ, 94450 48973 என்ற கைபேசி எண் வாயிலகவோ தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில், தனது சமூக வலைத்தளத்தில் மக்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை முத்தானூர் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி காந்தா என்பவரை நேற்று மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாததால், மாவட்ட எஸ்.பி.ஷ்ரேயா குப்தா, குற்றவாளிகள் கண்டுபிடிக்க ஏலகிரி மலை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 2 தனிப்படையினரை அமைத்து உத்தவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட முதல் பெண் ஆட்சியராக பொறுப்பேற்ற சிவ சவுந்தரவள்ளி முதல் நாளிலேயே ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி பகுதிகளில் உள்ள நியாயவிலை கடை, மருத்துவமனை, அரசு பள்ளி, நகராட்சி அலுவலகம் என சுழன்று சுழன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பல்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். இவரின் பணி சிறக்க வாழ்த்தலாமே!. ஷேர் பண்ணுங்க.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்.11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000- ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <
Sorry, no posts matched your criteria.