India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமையில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 கோரிக்கை மக்கள் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கடந்த ஆறு மாதங்களாக திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இன்று வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக நியமனம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி பாலியல் சீண்டல் செய்ததாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் இயக்குனர் விஜய் சீகன் பால் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில் பாராமெடிக்கல் கல்லூரியில் பணிபுரிந்து பாலியல் சீண்டல் உடந்தையாக இருந்த பெண் ஆசிரியை ஹேமா மாலினியை ஆம்பூர் அனைத்து மகளீர் காவல்துறையினர் நேற்று (8) கைது செய்தனர்.
குடியாத்தம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டி இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலில் மகளிர் பெட்டியில் சேலம் டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் போலீசார் ஆண்கள் யாராவது பயணம் செய்கிறார்களா? உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் 1039 அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 33 வகையான தற்காலிக காலிபணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி புதூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக வந்த புகாரை அடுத்து சந்திரா என்ற பெண் மீது மருத்துவ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நேற்று (07.02.2025) சந்திராவை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சிவ சௌந்தரவள்ளியை நேற்று (பிப்.,07) திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில், திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (07.02.2025) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.
Sorry, no posts matched your criteria.