India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில் வரும் 5ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, புகைப்படம் கொண்டு வர வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை விளையாட்டு அரங்கில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று காலை 9 மணியளவில் இதே விளையாட்டு அரங்கில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதம் தோறும் வரும் அமாவாசை நாட்களில் மேல் மலையனூர் செல்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய சான்றிதழ்கள் பெற மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசு, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வேளாண் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்ள சான்றிதழ் பெறுவதற்காக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்குகிறது.மேலும் தகவலுக்கு வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா மின்னணு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்தில் பார்வையிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக குடைகளுடனும், உதவி உபகரணங்கள் உடனும் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மாவட்டம் முழுவதும் தனி நபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேர் செய்யவும்.
திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பொதிகை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இளைஞர்கள் முகாமினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஆம்பூர் நகரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் வாழ்த்துக்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.