India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை வாசிக்க அனைத்து கிராம பொதுமக்களும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழியிணையும் ஏற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே 72 வயது மதிக்கதக்க மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்கள். தப்பியோடிய கொலையாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டிகளை குறிவைத்து நடைபெறும் கொலைகளில் இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மிகுப்பம் கிராமத்தில் உள்ள மருந்தகங்களில் போலி மருத்துவம் நடப்பதாக புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் இன்று ஸ்ரீ சபரி மெடிக்கல், SKN மெடிக்கல், ஸ்ரீ பாலாஜி மெடிக்கல் சிவசக்தி மெடிக்கல் ஆகிய 4 மருந்தகங்களுக்கு நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வைத்து கிராமசபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள தலைமை கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் வாகன பயணத்தின் போது கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லவும், நீண்ட நேர வாகன பயணத்தில் ஈடுபடாதீர்கள் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பத்தூரில் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். மதுபானக் கடைகள், அனைத்து மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் அக்.3ஆம் தேதி காலை 12 மணி வரையும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சட்ட விரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். மேலும் அரசு நல திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஜிடிபி வளாகத்தில் இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற வாராந்திர திங்கள் தின குறைதீர்ப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்தும் பலதரப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த வகையில் இன்று மட்டும் 364 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.