Tirupathur

News March 20, 2025

3 மாத குழந்தை மர்ம மரணம்

image

திருப்பத்தூர், அபாய் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (30) – சுகந்தி (21) தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் (மார்.18) காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 19, 2025

8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

மதுபோதையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. நேற்று (மார்ச்.18) அதிக அளவு மதுபோதையில் இருந்த இவர், தனது மனைவி காஞ்சானவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த காஞ்சானவை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காஞ்சனாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ராஜூவை கைது செய்தனர்.

News March 19, 2025

திருப்பத்தூர் அருகே குளு குளு பகுதி

image

திருப்பத்தூர் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஏலகிரி, ஆண்டு முழுவதும் இதமான வானிலையை வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஏலகிரியில், ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் செல்லலாம். அது மட்டுமின்றி ஏலகிரி ஏரியில் போட்டிங் செய்துவிட்டு, இயற்கை பூங்கா, அட்வென்ச்சர் பார்க், முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகியவற்றையும் பார்வையிடலாம்.

News March 18, 2025

31.03.2025 க்குள் வரிகளை செலுத்த ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 208 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், வர்த்தக உரிமம் மற்றும் தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 31.03.2025-க்குள் செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News March 18, 2025

நினைத்தது நிறைவேறுமா? சுனை காட்டும் அறிகுறி!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து கொண்டு வாழைப்பழத்தை அந்த சுனையில் விடுகின்றனர். அந்த பழம் மீண்டும் மேல வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

திருப்பத்தூரில் புத்தக திருவிழா

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வி துறை மற்றும் பொது நூலக இயக்கம் இனைந்து நடந்தும் 4ஆம் ஆண்டு புத்தக திருவிழா 22.03.2025 முதல் 31.03.2025 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

image

2025 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தையொட்டி  திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டங்கள் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 17, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ,சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் குற்றங்களுக்கான உதவி எண் : 1930 தொடர்பு கொள்ளலாம் என பதிவேற்றம் செய்துள்ளனர்.

error: Content is protected !!