India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதி நாட்றம்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (RSS) சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை முருகன் கோவிலில் இருந்து நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் நகர பகுதியை சேர்ந்தவர்கள், மாதனூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் வார விடுமுறையில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலிசார் ஏலகிரி மலை லாட்ஜ் சோதனை செய்தனர். அப்போது பாலியல் தொழில் ஈடுபட்ட 4 பெண்கள், 2 லாட்ஜ் மேலாளர் உள்பட 13 பேர் மீது ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 52 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக காவலூரில் 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை விவரம் – காவலூர் 18 மி. மீ., வாணியம்பாடி 21 மி. மீ., நாட்றம்பள்ளி 24.50 மி. மீ., கேத்தாண்டபட்டி 20 மி. மீ., திருப்பத்தூரில் 52 மி. மீ. மழை பெய்ததாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மழை நேரங்களில் அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக இதுகுறித்து அவசர உதவி எண்ணான 1912 மற்றும் 9498794987 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த சரத்குமார் (31) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாணியம்பாடி நகர பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் கோணாமேடு மற்றும் காமராஜபு–ரம் பகுதி இளைஞர்களிடையே மேளம் அடிப்பதில் நடந்த தகராறு காரணமாக காமராஜபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் படி 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் சிவகங்கை நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக தங்களது பகுதியில் இருக்கவும்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த முனி சுப்பராயன் பணி ஓய்வு பெற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த ஆர்.புண்ணியக்கோட்டி தற்போது திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 32.1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு ஆம்பூர், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு விடிய விடிய பெய்த கன மழையின் 32.1 சென்டிமீட்டர் அளவிற்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் கேபிஏ பேலஸ் திருமண மண்டபத்தில் 06.10.2024 அன்று காலை 8 மணி முதல் 2 மணி வரை தென்னிந்திய நம்பர் ஒன் நேரடி வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் நடத்தும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. வேலையற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.