Tirupathur

News October 9, 2024

கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.

image

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன், விஜயகுமார், ராஜவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் இரண்டு பட்டாக்கத்தி மற்றும் 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

News October 8, 2024

திருப்பத்தூரில் ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு குழு டாக்டர் எம் ஆர்த்தி தலைமையில் சுகாதார நிலையம் அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை குறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

திருப்பத்தூர் எஸ்.பி., பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்ன பின்ன தெரியாத நபர்கள் TELEGRAM, WHATSAPP, FACEBOOK VIDEO CALL மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் விழிப்புடன் இருப்போம் மோசடிகளை தவிர்ப்போம்” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துள்ளார்.

News October 8, 2024

திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் 6 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை தலா ரூ.1,200 பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

News October 8, 2024

திருப்பத்தூரில் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 432 மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய 432 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மேலும், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 8, 2024

இசைக்கருவிகளை வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சமூக பொறுப்பு நிதி மூலம் புதூர் நாடு உள் வட்டம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த நாடக சபா குழுவினருக்கு நாடக கலையை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ1,21,000 மதிப்பிலான மிருதங்கம், ஆர்மோனியம், தபேலா ஆகிய இசைக்கருவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

News October 7, 2024

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பள்ளித் தெரு பகுதியில் நேற்று அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், இதற்காக வைக்கப்பட்ட பேனரை இன்று மதியம் கழற்றி எடுத்து வரும் போது மின்சாரம் தாக்கி அயத்தம்பட்டு வாசு(48) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 7, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் கனமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில் பள்ளி குழந்தைகள், முதியோர் யாரும் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்கவும், ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 7, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல்வரின் முகவரி – சிஎம் ஹெல்ப்லைன் போர்ட்லட் கலெக்டரேட்டில் மனுக்களை அப்புறப்படுத்துவது தொடர்பான புதிய பணிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.