India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவராக சோபனா கோவிந்தராஜ் உள்ளார். இவரது கணவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நிலையில், கணவரின் சகோதரர் பாண்டியனுக்கு இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், அவரது மகன் 17 வயது சிறுவன், தனது சித்தியை கத்தியால் குத்தியுள்ளார்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் வட்டம், மாதனூர் ஒன்றியம் திருமலை குப்பம் மாதனூர்-ஓடுகத்தூர் சாலையில் நேற்று இரவு (பிப்ரவரி.27) பன்றி மீது ஆட்டோ மோதிய விபத்தில், வணியம்பாடி கொல்லாகுப்பம் ராஜேஷ் மகன் பிரதீப், வயது (27) கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸ்காரர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சோ்ந்த தினகரன். இவா் தனது பைக்கில் வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தாா். ஜம்புபள்ளம் கிராமம் அருகில் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது எதிரில் வந்த மற்றொரு பைக் மீது மோதி கீழே விழுந்துள்ளாா். இதில் தினகரன் தலை மீது டிராக்டா் சக்கரம் ஏறியதால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை நேற்று மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சித்தார். பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் தப்பி ஓடினார். சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.02.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு பொதுமக்களிடம் மொத்தமாக 53 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை அருகே பெரிய கம்பியம்பட்டு அண்ணா நகர் சேர்ந்தவர் குமார் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக அல்சர் நோயால் அவதிப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள சேகர் என்பவரின் மாந்தோப்பில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பெண்கள் கலை கல்லூரி பேருந்து நேற்று ( பிப்.25) கல்லூரி முடிந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது சோலூர் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பின்பக்கம் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது இதில் யாருக்கும் எவ்வித காயமும் இன்றி தப்பித்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பத்தூரில் மட்டும் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காவலூர் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வின்போது 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.