Tirupathur

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 5, 2025

கணவன்-மனைவி பிரச்சனையில் மனைவி தற்கொலை 

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்தவர் கலைவாணி இவருக்கு திருமணம் ஆகி கடந்த 10 வருடங்களாக கணவன் மனைவி பிரச்சனையால் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார், இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

News March 5, 2025

101 டிகிரி வெயில் பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

ஆம்பூர், திருப்பத்தூரில் நேற்று (மார்.4) 101 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. இனி வரும் நாட்கள் முழுவதும் வெயில் இப்படித்தான் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடை கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 4, 2025

நாயக்கனேறி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் நாயக்கனேறி ஊராட்சி பகுதியை சேர்ந்த கண்மணி மனதில் சகுந்தலா வயது (40) கூலி தொழிலாளி கடந்த 28 தேதி அரளி விதை குடித்து தற்கொலை முயற்சி அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்ந்த நிலையத்தில் (இன்று மே.4 இரவு) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக இன்றைக்குள் (மார்ச்.04) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

திருப்பத்தூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்; சதமடித்த வெயில்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 3) அதிகபட்சமாக 101 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வரும் காலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

News March 4, 2025

திருப்பத்தூர்: கோர விபத்தில் ஒரு உயிரிழப்பு 

image

நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமி புரம் பகுதியில் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார் நேற்று (மார்ச்.03) தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 1 பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இதில் படுகாயமடைந்த டிரைவர் பத்மநாபன் இன்று (மார்ச்.04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .ஹேமாவதி, சந்திரசேகரன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News March 4, 2025

ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து ஒருவர் தற்கொலை

image

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (58), நேற்று (03.03.2025) அதே பகுதியில் உள்ள பச்சூர் – மல்லானூர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 4, 2025

திருப்பத்துார்: நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு

image

தர்மபுரியை சேர்ந்த சூசையம்மாள் (35) என்பவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இதில் நளினி (32) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.திருப்பத்துார் மாதேஸ்வரன் என்பவர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி மொபைலில் வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.புகாரின் அடிப்படையில் நளினி கைது.

News March 4, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று (மார்ச்.3) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சவுத்திரிவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!