India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நேற்று “நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வருவாய் கோட்டாட்சியர்கள் வரதராஜன், அஜிதா பேகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பணத்திற்காக பெண் சிசுக்களை அழித்த வழக்கில் திருப்பத்தூர் மருத்துவர் சுகுமார்(60) கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வந்த 8 கர்ப்பிணிகள், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய திருப்பத்தூர் வந்திருந்தனர். இதுதொடர்பாக, 5 புரோக்கர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மருத்துவர் சுகுமாரை கந்திலி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22-08-2025) மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 8-12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, பொறியியல் படித்த மாணவர்கள் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04179-222033 தொடர்பு கொள்ளலாம் .
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஓராண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 358 நபர்களிடமிருந்து பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக 507 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களது 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, துத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் (20) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் தேசிய நெடுஞ்சாலை இன்று ஆகஸ்ட் 20 மாலை வாணியம்பாடி ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சாலையைக் கடக்கும் போது பைக் மோதி சோலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரஜினி மகன் ராகேஷ் வயது (14) 9 வகுப்பு பள்ளி மாணவன் படுகாயமடைந்தார். அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.08.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை 6 மணியளவில் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மலர்விழி துணைப்பதிவாளர் மீனாட்சி உதவி பொது மேலாளர் நபார்டு ஸ்ரீபதிராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.