India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மகா இவருக்கு அடிக்கடி வயிற்று வலி அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் வீட்டிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு திறன் மேம்பாட்டுதுறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை 10.03.2025 அன்று காலை 9 மணி முதல் நடைபெறும் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பிஎஸ்சி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகம் இரண்டு ஆண்டு முழு நேர பட்ட படிப்பும் ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டைய படிப்புக்கு www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மதமான ரமலான் கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது.இந்த மாதம் முழுவதும் சூரியன் உதயம், மறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நோன்பு நோற்பது வழக்கம். இதன் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் நோன்பு நோற்கும் நேரம் சற்று மாறுபடும். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நோன்பு வைக்கும் நேரமும் நோன்பு திறக்கும் நேரமும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வேலூர் நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் பயணித்த இருவர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளனர்.
திருப்பத்தூர்: நாச கவுண்டர் வட்டம் பகுதியில் புதர்களுக்கு தீ வைத்த மர்ம நபர். கதிரிமங்கலம் பகுதியில் நேற்று (மார்ச் 5) மாலை வேலையில் மர்மநபர்கள் புதர்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனை கண்டஅப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்- துளசி தம்பதியினர் கடந்த, 1ம் தேதி தாய் வீட்டுக்கு துளசி சென்றார்.அன்று தனியாக இருந்த ஆனந்த், மறுநாள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி உயிரிழந்தார். போலீசார், சிலம்பரசன் என்பவரை கைது செய்து விசாரித்ததில் ஆனந்தின் அக்கா, சிலம்பரசன் இருவருக்கும் தகாத உறவை தட்டிக்கேட்ட ஆனந்தை சிலம்பரசன் சரமாரியாக தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இ-பிளாக் தளத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வருகிற 4-04-2025 அன்று நடைபெற உள்ளது. இதில் மண்டல இணை இயக்குநர் பங்கேற்க உள்ளார். ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை வருகிற 15-03-2025க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செங்கிலிகுப்பம் பகுதியில் மனைவி மர்ம மரணம் வழக்கில் தலைமறைவாக இருந்து, கைதாகி நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்த டாக்டர், நேற்று மாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த 150 சவரன் தங்க நகை, 2 லட்சம் பணம் திருடுபோனதாக 100க்கு டயல் செய்து கூறியுள்ளார். இதையடுத்து ஆம்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். திருட்டு குறித்து உறுதியான தகவல் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
Sorry, no posts matched your criteria.