Tirupathur

News October 18, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (இன்று அக்டோபர் 18) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

திரும்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் மழைக்காலங்களில் “மின் கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பழைய கட்டிடங்களின் அடியிலோ நிற்பதை தவிர்க்க வேண்டும் ” என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

News October 18, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில்  பெண்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றிய களிலும் பசிக்கும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 50% மானியத்தில் 40, நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கபட உள்ளது இந்த சலுகைகளை பெற பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அனுகி பயன் பெறலாம் என நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் தர்பகராஜ் தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்

News October 18, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 18, 2024

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் (18.10.2024) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் வேளாண் துறை அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை தீர்வு காண உள்ளதால் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

News October 17, 2024

கதிருப்பத்தூர், இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (17.10.2024) குருசிலாபட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி, கந்திலி, பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News October 17, 2024

12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார் பெண் 

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாலை இரண்டு மணி அளவில் 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அணிலா தேவி கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்கள் காப்பகத்தில் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரை அடையாளம் கண்டு இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

News October 17, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் “வாகனங்களை ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதன் மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

News October 17, 2024

துபாய் சென்ற இளைஞர் இறந்ததாக அதிர்ச்சி தகவல்

image

நாட்றம்பள்ளி தோல்கேட் பகுதியைச் சார்ந்த பெரியசாமி மகன் சூர்யா வயது 20. துபாய்க்கு ஆட்களை அனுப்பும் குட் பிக் நிறுவனத்தில் பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவர் அறிமுகமாகி, அவரிடம் சூர்யா பிளம்பர் வேலைக்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். கடந்த 3ம் தேதி துபாய் சென்ற சூர்யா அவர் உடல்நகுறைவால் இறந்துவிட்டதாகாக பெற்றோர்களுக்கு தாவல் தெரிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News October 17, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் பதிவு செய்யப்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு பதிவு செய்ய 1 மாதம் அவகாசம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.