Tirupathur

News April 21, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் ஒரே சம சீதோஷ்ண நிலை ஏற்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் படகு சவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

News April 21, 2024

ஜோலார்பேட்டை அண்ணனை கொலை செய்த தம்பி கைது

image

ஜோலார்பேட்டை அருகே எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர் கடந்த 16 ஆம் தேதி தனது தாய் மலரிடம் மது போதையில் சாப்பாடு போட சொல்லி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் சஞ்சய் வீட்டின் அருகே ஹாலோ பிரிக்ஸ் கல்லை எடுத்து தலை மீது போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் மலர் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று சஞ்சயை கைது செய்தனர்.

News April 20, 2024

ஏலகிரி மலையில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டங்களின் ஆந்திர எல்லையோர பகுதிகள் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‌இதனால் கோடைகால வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2024

பைக் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

திருப்பத்தூர், ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் (ஏப்ரல்.19) நாச்சியார குப்பம் பகுதியை சேர்ந்த எழிலரசன்(47) (கூலி தொழிலாளி) இவரது பைக் மீது ஆலாங்குப்பம் முருகன் (55) என்பவரின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேர் படுகாயடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி எழிலரசன் உயிரிழந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2024

ஜோலார்பேட்டையில் அதிக வாக்குப்பதிவு

image

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், திருப்பத்தூர், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கும். திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் 73.88 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் ஜோலார்பேட்டை தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 76.15 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக திருவண்ணாமலையில் 70.09 சதவீதம் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

ஜோலார்பேட்டை அருகே மின் தடை பொது மக்கள் அவதி

image

ஜோலார்பேட்டை அருகே பெரிய கம்மியம்பட்டு பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் முதியவர்கள் மின் சப்ளை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் மின் சப்ளை சரிசெய்யபடவில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.

News April 19, 2024

வாணியம்பாடி அருகே தேர்தல் பதற்றம்

image

வாணியம்பாடி அடுத்த கோணாமேடு வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்கு அளித்தலும் தாமரைக்கு வாக்கு விழுவதாக விசிகவினர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்குபதிவு இயந்திரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வாக்காளர்கள் கோரிக்கை வைத்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News April 19, 2024

ஜோலார்பேட்டை : 40 நிமிடங்கள் தாமதம்

image

ஜோலார்பேட்டை அருகே குருமன்ஸ் வட்டம் பகுதியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. அப்போது திடீரென இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் 40 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

News April 19, 2024

2ஆவது முறையாக இயந்திரம் கோளாறு

image

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

News April 18, 2024

வாக்களிக்க பெயரை உறுதி செய்ய வேண்டும்

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.

error: Content is protected !!