Tirupathur

News October 20, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை இடி மின்னலுடன் கூடிய  கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News October 20, 2024

பூ பறிக்க செல்லாததால் தந்தையை அடித்துக் கொலை

image

திருப்பத்தூர் அருகே ஏ.கே.மோட்டூர் ஊராட்சி புதுபூங்குளம் குமரன்நகரை சேர்ந்தவர் காந்தி (60), விவசாயி. இவருக்கு ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இவர்களது தோட்டத்தில் விளைந்த ரோஜா பூக்களை விற்பனைக்கு பறிக்க காந்தி செல்லாததால், அவருக்கும் அவரது மகனுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜீவ் காந்தி அவரது தந்தையை கட்டையால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News October 19, 2024

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (அக் 19) கந்திலி, குருசிலாபட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

News October 19, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்று சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

திருப்பத்தூரில் ஊர் காவல் படையினருக்கு கேன்டீன் அட்டை

image

திருப்பத்தூர் மாவட்ட ஊர்காவல் படையினருக்கு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கான சீருடைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்காவல் பிரிவு ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News October 19, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வுவை மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3503 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு.

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பேஸ்புக் வலைத்தளப் பதிவில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், கடுமையான மழைப்பொழிவு பெய்யும் நேரங்களில் வாகன ஓட்டிகள் ஹெட்லைட்டை ஒளிர விட்டபடி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு.

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்றம்பள்ளியில் 22 மில்லி மீட்டரும், வாணியம்பாடி பகுதியில் 2 மில்லி மீட்டரும், கேத்தாண்டபட்டி பகுதியில் 8 மில்லி மீட்டரும், திருப்பத்தூர் பகுதியில் 12.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News October 18, 2024

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணி 

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் துறை அலுவலகம் செய்தி குறிப்பில் ஆம்பூர் டவுன், வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஆலங்காயம், கந்திலி, நாட்றம்பள்ளி, உமராபாத், ஆம்பூர் உள்ளிட்ட  பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. 

News October 18, 2024

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய அளவில் சிறந்த விளையாட்டு 2 வீரர் மற்றும் 2 வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ1 லட்சம் மற்றும்10 ஆயிரம் மதிப்பிலான பதக்கங்கள் வழங்க உள்ளனர். இந்த விருதை பெற விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்.