India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி ஆலயத்தின் 95 ஆம் ஆண்டு உற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.
மக்களவை தேர்தலையொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 267 பூத் மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.
வாணியம்பாடி கே.பி.ஏ பேலஸ் அருகில் நாளை (மார்ச் 23) வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாக முகவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் தேவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த ரத்தினம் (67) விவசாயி பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று(மார்ச்.21) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்ற 177 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது உரிய ஆவணமின்றி ஏடிஎம் வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65.90 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேலான தகவல்களுக்கு 9042822722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.